states

img

‘ஓடு கொரோனா ஓடு’ என்று தீப்பந்தத்துடன் ஓடிய கிராம மக்கள்.... பாஜக ஆளும் ம.பி. மாநில கிராமத்தில் விநோதம்....

போபால்:
மத்தியப் பிரதேசம் மாநில அஹர்மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா என்ற கிராமத்திலுள்ள தீப்பந்தத்தை கொண்டு கொரோனாவை விரட்டப் போகிறோம் என்று கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் விகிதம் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை கைகளில் எடுக்கும் கணேஷ்புரா கிராமமக்கள், ‘ஓடு கொரோனா ஓடு’ என்ற முழக்கத்துடன் ஊரைச் சுற்றி வருவதாகவும் முடிவில் தீப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிடுவதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.தங்களின் கிராமத்தில் எப்போதெல்லாம் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் வீட்டிற்கு ஒருவர் தங்கள் வீடுகளில் இருந்து கிராமத்தின் எல்லைகள் வரை எரியும் தீப்பந்தத்துடன் ஓடுவது வழக்கம் என்றும், எறியப்படும் தீப்பந்தங்களோடு தொற்றும் எரிந்துபோகும் என்பது தங்களின் நம்பிக்கை என்றும் கணேஷ்புரா கிராம மக்கள் கூறியுள்ளனர்.கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, வீட்டு வாசலில் கைகளைத்தட்டி ஒலி எழுப்புமாறும், அமாவாசை யன்று விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர்மோடி கூறினார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ‘‘கோ கொரோனா கோ கொரோனா’’ (GO Corona Go Corona) என்றுசொன்னாலே, கொரோனா ஓடிவிடும் என்றார். இவர்களுக்கு கிராம மக்கள் பரவாயில்லை என்று சமூக வலைத்தள வாசிகள் கூறிவருகின்றனர்.

;